faith
விசுவாசத்தால் உண்மையில் என்ன செய்ய முடியும்? நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
பிரகாசிக்கும் விசுவாசம்
விசுவாசம் என்பது வேதாகமத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்று; அதன் மிக அழகான கருத்துகளில் ஒன்றும்கூட. இருந்தாலும் அதை அடக்கி வைத்துக்கொள்வது எளிது. தேவனை உண்மையாக நேசிக்கிற நம்மில் பலரும்கூட பாதுகாப்பான பக்கத்திலேயே இருக்க விரும்புகிறோம். நாம் ஜெபிக்கிறோம், ஆனாலும் சுகமளிப்பைப் பற்றியும் வேலையைப் பற்றியும் மிக முக்கியமான காரியங்களைப் பற்றியும் மனதுக்குள் அதிகம் எதிர்பார்க்காமல் இருக்கிறோம். ஏமாற்றமடைந்துவிடுவோமோ என்று பயப்படுகிறோம்.