முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்லவும்

இயேசுவே மேசியாவா?

Jesus sculpture

இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்து நம்மை இரட்சித்தார் என்பதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அவரை விசுவாசிக்கிற எவனும் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்.

நம் வாழ்வை இரட்சிப்பதே எதிர்பார்க்கப்பட்ட மேசியாவின் பணி... ஆனால் இயேசுதான் உண்மையான மேசியாவா, அல்லது நாம் வேறொருவருக்காகக் காத்திருக்க வேண்டுமா?

தெரிந்துகொள்ளப்பட்டவரைப் பற்றிய, அதாவது நம் அனைவரையும் இரட்சிக்கப்போகிறவரைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை, கி.மு. 8-ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து நாம் பெறுகிறோம். அது ஏறக்குறைய இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு.

1ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்;
அவனுடைய வேர்களிலிருந்து வரும் ஒரு கிளை கனிகொடுக்கும்.
2யெகோவாவின் ஆவியானவர் அவரில் தங்குவார்.
ஞானத்தையும், விளங்கும் ஆற்றலையும், ஆலோசனையையும்,
பெலனையும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும்
அருளும் ஆவியானவரே அவரில் தங்குவார்.
3அவரும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் மகிழ்ச்சிகொள்வார்.
அவர் தம் கண்களால் காண்பதைக்கொண்டு மட்டும் நியாயந்தீர்க்கமாட்டார்;
காதுகள் கேட்பதால் தீர்மானம் எடுக்கவுமாட்டார்.
4ஆனால் அவர் எளியவர்களை நீதியுடன் நியாயந்தீர்த்து,
பூமியிலுள்ள ஏழைகளுக்காக நியாயத்துடன் தீர்ப்பளிப்பார்.
அவர் தன் வார்த்தை என்னும் கோலினால் பூமியை அடிப்பார்,
தனது உதடுகளின் மூச்சால் கொடியவர்களைக் கொல்வார்.
5நீதி அவரது அரைக்கச்சையாகவும்,
உண்மை அவரின் இடைக்கச்சையாகவும் இருக்கும்.
( ஏசாயா 11:1-5 )

மேசியா தாவீது ராஜாவின் சந்ததியில் வருவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்…

1“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர்,
என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்;
இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன்,
அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார்.
2அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார்.
அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார்.
3அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,
மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்;
அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார்.
4பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை
தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார்.
தீவுகள்42:4 பண்டைய உலகில் மக்கள் தொலைவில் இருந்த நாடுகளை தீவுகள் என்று அழைப்பார்கள். அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
5யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது:
அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார்,
அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார்.
அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார்.
அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே:
6“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து,
நான் உனது கையைப் பிடித்து,
நான் உன்னைக் காத்து,
நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும்,
பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன்.
7குருடரின் கண்களைத் திறக்கவும்,
சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும்,
இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.
( ஏசாயா 42:1-7 )

இங்கே அந்த “ஊழியக்காரர்” தாழ்மையுள்ளவராக இருப்பார், பொது இடத்தில் தம் சத்தத்தை உயர்த்தமாட்டார், குருடரின் கண்களைத் திறப்பார் என்று காண்கிறோம்…

ஏசாயா தன் புத்தகத்தில் அவரைப் பற்றி வேறு என்ன சொல்லுகிறார்? மற்ற மனிதர்கள் மேசியாவை எப்படி நடத்துவார்கள்? அவருக்கு என்ன நேர்ந்தது, அது நமக்கு என்ன அர்த்தம் தருகிறது? இதற்குப் பதிலளிக்க, ஏசாயா எதிர்காலத்துக்கு முன்னோக்கிச் சென்று, நாம் ஏற்கெனவே புறக்கணித்துவிட்ட மேசியாவைப் பற்றி நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்.

1எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
2யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும்,
வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார்.
நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை;
அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை.
3அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்;
அவர் துன்பத்தின் மனிதனாய்53:3 துன்பத்தின் மனிதனாய் அல்லது வியாதியில் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார்.
அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல்,
அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை.
4உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு,
நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார்.
அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு,
அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.
5ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார்,
எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்;
நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது,
அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம்.
6நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்;
நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம்.
யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும்
அவர்மேல் சுமத்தினார்.
7அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்,
அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை;
அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும்,
மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும்
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
8ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?
ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்;
எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார்.
9அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை,
அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.
ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது;
தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார்.
10ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே
யெகோவாவின் திட்டமாய் இருந்தது,
அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும்,
அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார்.
யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும்.
11அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின்
அவர் வாழ்வின் ஒளியைக் கண்டு திருப்தியடைவார்;
நீதியுள்ள எனது ஊழியன் தமது அறிவினால்
அநேகரை நீதியானவர்களாக்குவார்,
அவர்களுடைய அநியாயச் செயல்களை அவரே சுமப்பார்.
12ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்;
அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார்.
ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி,
குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்.
ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து,
மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.
( ஏசாயா 53:1-12 )

புறக்கணிக்கப்பட்டு அசட்டை பண்ணப்பட்ட மேசியா, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக்குட்டியைப் போல, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்று காண்கிறோம். அவர் சந்ததியின்றி மரித்தார்; ஆனாலும் அவர் “நீடித்த நாளாயிருப்பார்”, “சந்ததியைக் காண்பார்”. இதன் பொருள், மேசியா தம் மரணத்திற்குப் பின் பூமியிலோ பரலோகத்திலோ உயிர்த்தெழுந்து, சரீரப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய பிள்ளைகளைப் பெறுவார் என்பதாக இருக்கலாம்.

இப்போது, உங்களுக்கான ஒரு பயிற்சியாகவும், இயேசுவே எதிர்பார்க்கப்பட்ட மேசியாவா என்று தீர்மானிப்பதற்காகவும், தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இயேசுவுடன் நேரடியாகக் கழித்த மத்தேயு, மாற்கு, யோவான் ஆகியோரும், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளைக் கவனமாகச் சேகரித்த வைத்தியனாகிய லூக்காவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதிய சாட்சிகளை வாசியுங்கள்…

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)